பொய்யும் பொறுமையும்

அன்புள்ள நண்பர்களே,


இணைய வளைத்தளத்தில் போலிச் செய்திகளும் உண்டு. உதாரணம், சுந்தர் பிச்சை அவர் ஆசிரியரைச் சந்திக்கிறார் என்று ஒரு வீடியோ பரவி வருகிறது. அதில் உள்ளவர் ஒரு நல்ல மனிதர், ஆனால் சுந்தர் பிச்சை அல்ல, அவர் பெயர் கணேஷ் கோலி.

வேறு யாரோ குறும்புக்காரர் அல்லது தனக்கு மிக attention, likes வேண்டுபவர் திரித்துப் போட்டிருக்கலாம்.

உண்மை எது, பொய் எது என்று தெரிந்து ஆராயும் திறனை, நாம் ஆர்வத்தால், மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்று எதார்த்தமாக இழந்து விடக்கூடும், வந்ததையெல்லாம் பகிர்ந்து கொண்டிருந்தால்.


நானும் ஓரளவு நம்பி இந்த வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்த போது என் மனைவி கேட்டார், 'சுந்தர் பிச்சை கர்னாடகாவில் படித்தாரா?' என்று. சுந்தர் பிச்சை ஏன் மொட்டை அடித்துவிட்டார், அதுவும் அரைவாசி முடியுடன், இல்லை இயற்கையிலேயே வழுக்கைத் தலையா? அது சரியில்லையே! பார்த்தால் இவர் போல இல்லையே என்றெல்லாம் நான் எண்ணிக் கொண்டிருந்த போது, அவர்கள் கேட்ட கேள்வி இன்னும் என்னை ஆராயத் தூண்டியது. உண்மை தெரிந்தது.

யோசித்துப் பகிர்வோம். கொஞ்சம் கவனித்து, நேரம் எடுத்து, facts check செய்து பகிர்வோம். அதே சமயம், நல்ல விசயங்களாக இருந்தாலும் எது எங்கிருந்து வந்தது, அதன் மூலம் (source ) எது என்று தெரிந்து, அதைச் சொன்னவர்களுக்கும், இல்லை அந்த போட்டோ, அல்லது வீடியோ எடுத்தவர்களுக்கும் நன்றி தெரிவிப்போம். (give credits). ஆர்வத்தின் உந்துதலில் நாம் படைத்தவன் இல்லை என்ற உண்மையை மறவாது நன்றி உள்ளவர்களாக இருப்போம்.

ஆகட்டுமா நண்பர்களே?

நன்றி. காம்ராஜ்சுந்தரம்


#காம்ராஜ்சுந்தரம் #kamrajsundram

#sarvahleaguetamil

போட்டோ: சுந்தர் பிச்சை, மூலம் ( Source) : Google போட்டோ: கணேஷ் கோலி, மூலம் (Source): IC3 foundation

Copyright © 2020 KAMRAJ SUNDRAM. All rights reserved.