நன்றியுணர்ச்சியும் நட்பும் காதலாக மாற வேண்டும் என்று நேர்முகமாக, மறைமுகமாக, நாம் விரும்பி இருத்தல், ஆண் பெண் நல்லுறவுமுறை உடலும் உணர்ச்சிகளும் சேர்ந்தது மட்டுமே என்ற மனநிலை.
மேலும் ஆணுக்குப் பெண் மனைவியாக அல்லது சகோதரியாக, பெண்ணுக்கு ஆண் கணவனாக அல்லது சகோதரனாக மட்டுமே இருக்க முடியும், மற்றதெல்லாம் ஆபத்து என்ற பய நிலை.
பகுத்தறிவுவாதிகள் என்று தங்களைத் தாங்களே கூறிக் கொண்ட சில மனிதர்கள் தோழன் தோழி என்ற உறவைக் கொச்சைப்படுத்தியது உண்மை. உண்மையான நட்பை, மேன்மையான உறவை, அம்மனிதர்களின் செயல்கள் ஒன்றும் செய்ய இயலாது. அந்த மனிதர்கள் அறியாமையால் எல்லா உறவையும் கொச்சைப்படுத்துபவர்கள்.


எழுவோம் ஒளி துலங்க, ஏனெனில் அதுவும் நம் இயல்பு. #காம்ராஜ்சுந்தரம் #kamrajsundram #sarvahleagueriseandshinetamil
Thanks to Bess Hamiti from Pexels for the boy & girl photo. Sister Nivedita and Swami Vivekananda Photo is from public domain.